நிதி நிறுவனங்களே ”ஆவா” போன்ற ஆயுதக் குழுக்களை வடக்கில் உருவாக்கியது?

Saturday, October 29th, 2016

யாழ் குடாநாட்டில் ஆவா கும்பலுக்கு மேலதிகமாக மேலும் ஐந்து பாதாள உலகக் கோஷ்டிகள் இயங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் குடாட்டிலுள்ள பாதுகாப்புப் படையினரை மேற்கொள்காட்டி கொழும்பிலுள்ள சிங்கள ஊடகங்களை மேற்கோள் காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

அதேவேளை யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கில் கிளைகளை உருவாக்கிய நிதி நிறுவனங்கள், வாகனக் கடன்களை வழங்கி, திருப்பிச் செலுத்தாத நபர்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக ஆவா கெங்கஸ்டர் உட்பட பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு பணம்கொடுத்து உருவாக்கியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

நிமலன், தில்லு, ஜூட், பாஹீல், சனா என்ற பெயரில் இந்த பாதாள உலகக் கும்பல்கள் இயங்கிவருவதாகவும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர். ஆவா கும்பலை வினோதன் என்பவரே இயக்குவதாகவும் கூறியுள்ள பாதுகாப்புப் படையினர். குறித்த நபர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரை வாளால் வெட்டிய சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் வினோதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

இதேளை ஜெயநந்தன், சத்குணராசா, அங்கலிங்கம் பிரங்ஷா, ஜெயம், காந்தன், சிவலிங்கம் மற்றும் இராசையா ஆகியோரே தற்போது ஆவா கெங்ஸ்டரை இயக்கி வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அதேவேளை 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே யாழ் குடாநாட்டிலும், வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான ஆயுதக் கும்பல்கள் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

9372

Related posts: