அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பின் நகல்வடிவு – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதி!

Tuesday, September 29th, 2020

புதிய அரசமைப்பின் நகல்வடிவை அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் நியமித்த 9 உறுப்பினர்கள் விசேட குழு ஏற்கனவே தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ள அமைச்சர் பரிந்துரைகளின் அடிப்படையில் முதலாவது நகல்வடிவம் ஆறு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 19 ஆவது திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புகளை களைவதற்காகவே 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கையின் போது நிபுணர்கள் எதிர்கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் கோரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் புதிய அரசமைப்பை கண்மூடித்தனமான விதத்தில் ஒருதலைப்பட்சமாக உருவாக்க மாட்டோம் என தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ், அரசமைப்பு பல தசாப்தங்கள் நீடிக்கின்ற விடயம் என்பதால் அனைவரினதும் கருத்தினை உள்வாங்குவோம் என அவர்தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது போன்று 19 திருத்தம் காரணமாக தேசிய பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தின் மூலம் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி முன்னைய ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரின் செயற்பாடுகளை மற்றவர் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமரர் பொண்னையா பாலகிருஸ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றி வந்த ஆறு சந்தேக நபர்கள் கைது -, ஆறு கனரக வாகனங்களும் தடுத்து...
2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி க...