பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் தொடர்பில் முறையிடவும்!

Monday, April 3rd, 2017

பாவனைக்கு பொருத்தமற்ற உணவு அல்லது உரிய தகவல்களற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பாக தகவல்களை நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபைக்கு தெரிவிக்குமாறு சபையின் தலைவர் ஹசித திலகரத்ன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சில குறுகிய நோக்கம் கொண்ட வர்த்தகர்கள் காலாவதியான மற்றும் பழுதடைந்த உணவுப் பொருட்களை சந்தைக்கு விநியோகித்து வருவதாகவும் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் இருந்த ஒரு தொகை கருவாடு புறக்கோட்டை கரையோர வீதியில் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த போது நுகர்வோர அலுவல்கள் தொடர்பான அதிகாரிகள் நேற்று கைப்பற்றினார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட 2 ஆயிரம் கிலோ கருவாடும் இங்கிருந்துள்ளது. இவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். புததாண்டு காலப்பகுதியில் இவற்றை சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்கிழமை  மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பான விடயங்கள் சமர்ப்பிக்கப்படுமென்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: