சிறுதானியப் பயிர்ச் செய்கையால் பெரும் விளைச்சல்!

Tuesday, April 17th, 2018

தென்மராட்சி தெற்குப் பிரதேசத்தில் மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையின் பின்னரான பரீட்சார்த்தமான சிறுதானியப் பயிர்ச்செய்கை ஒரு சில விவசாயிகள் பெரு விளைச்சலைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மறவன்புலவுப் பகுதியில் சிறுதானியப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள 342 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விதை தானியங்களும் உபகரணங்களும் மாகாண விவசாய அமைச்சினால் வழங்கப்பட்டன.

கைதடி கமநல சேவைகள் நிலையப் பெரும்போக அலுவலரின் நேரடி கண்காணிப்பின் பயனாக சில விவசாயிகளால் பயிரிடப்பட்ட பயறு, கௌபி, உளுந்து போன்றவை பெரு விளைச்சல் கண்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

ந.திருநீலகண்டன் என்னும் விவசாயி ஒரு ஏக்கர் பரப்பில் மேற்கொண்ட உளுந்து 300 கிலோவும் தலா 12 பரப்பு காணியில் பயிரிடப்பட்ட கௌபி 120 கிலோவும் பயறு 93 கிலோவும் விளைச்சல் கண்டுள்ளதெனவும் இவருடன் 9 விவசாயிகள் பயிரிட்ட உளுந்து, பயறு, கௌபி போன்ற பயிர்கள் பெரு விளைச்சல் காணப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரிவில் உள்ள 342 விவசாயிகள் சிறுதானியப் பயிர்களைப் பயிரிட்டபோதும் அந்தகாலப் பகுதியில் போதிய மழை வீழ்ச்சியின்மை மற்றும் கட்டாக்காலி கால்நடைகளால் சேதம் போன்றவற்றினால் பெருமளவு விவசாயிகள் போதிய விளைச்சலைப் பெறமுடியவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts:

தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ தெரிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சை- அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன்!
இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்பட...