நாட்டில் அரிசித்தட்டுப்பாடு இருக்க பெருந்தொகை நெல் மதுபான உற்பத்திக்கு!

Sunday, March 26th, 2017

களஞ்சியசாலைகளிலிருந்த பெருந்தொகை நெல் மதுபான உற்பத்திக்காக மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அரிசி விலை குறைவடையவிருந்த வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் குற்றஞ்சாட்டியுள்ளன.

மத்தளை களஞ்சியசாலையிலிருந்த பெருந்தொகை நெல், மதுபான உற்பத்திக்காக மென்டிஸ் நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில்

சபையிடம் அமைச்சரவையில் பெறப்பட்ட அனுமதிக்கமைய, மூன்று சந்தர்ப்பங்களில் 4000 மெட்ரிக் தொன் நெல்லை மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கியதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்தது.

வறட்சியினால் நெற்செய்கை பாதிக்கப்பட்டு நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மதுபான உற்பத்திக்காக நெல் வழங்கப்பட்டுள்ளமையால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவத்துடன் தொடர்புடைய அர்ஜூன் அலோசியஸூக்கு சொந்தமானதென கூறப்படும் மதுபான உற்பத்தி நிலையம் கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் நெல் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் கிழக்கு மாகாணத்தில், மதுபான உற்பத்தியை ஆரம்பிப்பது தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுவதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

Related posts: