இலங்கையின் கடன் பிரச்சினையில் பங்கைச் செய்யத் தயார் – சீனா – இந்தியாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது ஜப்பான்!

Friday, September 30th, 2022

இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளது. அதுபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற பிற கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் பிற கடன் வழங்குனர்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு தனது சொந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை அவர் வலியுறுத்தினார்.

அத்தகைய முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜப்பான் தனது பங்கைச் செய்யும் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய சுசுகி அனைத்து கடன் வழங்குநர்களும் ஒருங்கிணைந்த முறையில் இலங்கைக்கு ஆதரவை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும்,

அதே நேரத்தில் கடனாளி நாடுகள், கடனை பெற்றுக்கொள்வதற்கான சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கையை நோக்கி தமது கருத்தை அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: