சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் சபாநாயகர் விளக்கம்!

Tuesday, September 3rd, 2019


கடந்த யுத்தகால பகுதி உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக அரிப்பணித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்காக தெற்காசிய பாராளுமன்ற மேடை அமைப்பின் மூன்றாவது வருடாந்த அமர்வு பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொழும்பு பிரகடனம் சிறுவர்கள் தொடர்பிலான கருத்துக்களை பிரதிபலிப்பதாக அமையும் இந்த கருத்துக்களின் அடிப்படையில் கொள்கை வகுப்பும் இடம்பெறும். இதன் ஊடாக எமது சிறுவர்களின் உரிமைகள் 21 ஆம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் முழுமைப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

30 வருட காலம் பழமை வாய்ந்த உடன்படிக்கையின் கீழான சிறுவர்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்களில் மாற்றம் ஏற்படவில்லை. ஆகையால் 627 மில்லியன் சிறுவர்களைக் கொண்ட தெற்காசிய பிராந்தியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் சவால்கள் எஞ்சியள்ளன. இணையத்தளங்களின் அறிமுகம், காலநிலை மாற்றம் நகரமயமாக்கம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்ந்தும் இருந்து வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர்களின் அரம்ப புகலிடம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தெற்காசிய பிராந்திய மக்களுள் 36 சதவீதமான சிறுவர்களை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகுமென்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் யுனிசெப் அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் Jean Gough, சார்க் செயலகத்தின் சமூக அலுவல்களுக்கான பணிப்பாளர் ரிஸ்பா ரஷீத் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

Related posts: