நகர அபிவிருத்திக்கு உலக வங்கி 55 மில்லியன் டொலர்!

Friday, June 3rd, 2016

இலங்கையின் நகர அபிவிருத்திக்காக உலக வங்கி 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதியளித்துள்ளது.

நகர்ப்புற சேவைகள், கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் சொத்துக்களை பாதுகாத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த கடனுதவி வழங்கப்படுகிறது.

அதன்படி யாழ் நகர திட்டத்துடன் இணைந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், காலி மற்றும் கண்டி நகரங்களின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கும் அந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் தொடர்பாக கருத்துரைத்த உலக வங்கியின் பணிப்பாளர், குறித்த நிதியை 5 வருடங்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில், 25 வருடத்திற்குள் செலுத்தி முடிக்க கூடியவாறு வழங்கியுள்ளதாக கூறினார்.

நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

Related posts: