தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, January 16th, 2021

கடந்த ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் முன்னணி பாடசாலைகளில் 6ம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி கலவன் பாடசாலைகளில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு 181 புள்ளிகளும், மூதூர் மத்திய கல்லூரிக்கு 171 புள்ளிகளும், கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரி 168 புள்ளிகளும், கொக்குவில் இந்து கல்லூரி 167 புள்ளிகள், அப்புகஸ்தலாவ – அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை 166 புள்ளிகளும், சம்மாந்துறை – முஸ்லிம் மத்திய கல்லூரி 165 புள்ளிகளும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 165 புள்ளிகளும், கெக்குனாகொல தேசிய பாடசாலை 164 புள்ளிகளும், மாவனெல்ல சாஹிரா கல்லூரி 164 புள்ளிகள் கல்முனை காமல் பாத்திமா கல்லூரி 164 புள்ளிகள், ஹாலி-எல – ஊவா விஞ்ஞான கல்லூரி 164 புள்ளிகள், விஸ்வமடு மஹா வித்தியாலயம் 164 புள்ளிகள், கரவெட்டி நெல்லியடி மத்திய கல்லூரி 163 புள்ளிகள், கம்பஹா சாஹிரா கல்லூரி 162 புள்ளிகள், கொழும்பு 12 – விவேகாநந்தா கல்லூரி 162 புள்ளிகள், மாவனெல்ல – பதுரியா மத்திய மஹா வித்தியாலயம் 162 புள்ளிகள், அக்கரைப்பற்று சிறி ராமகிருஷ்ணா கல்லூரி 162 புள்ளிகளும், மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் 161 புள்ளிகளும், அட்டாளைச்சேனை மத்தியக்கல்லூரி 161 புள்ளிகள், கொட்டகலை தமிழ் மஹா வித்தியாலயம் 161 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ஆண்கள் பாடசலைகளில் கொழும்பு 7 ரோயல் கல்லூரி 187 புள்ளிகளும், கொழும்பு 7 டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி 179 புள்ளிகளும், பருத்தித்துறை – ஹாட்லி கல்லூரி 178 புள்ளிகள், கொழும்பு 5 இசிபத்தானை கல்லூரி 174 புள்ளிகள், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி – 166 புள்ளிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 161 புள்ளிகள், மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி 160 புள்ளிகள், ஓட்டமாவடி மத்தியகல்லூரி 160 புள்ளிகள், சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி 160 புள்ளிகள், திருகோணமலை ஆர்.கே.எம். சிறி கோணேஸ்வரா இந்து கல்லூரி 159 புள்ளிகள், புத்தளம் சாஹிரா கல்லூரி 157 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மகளிர் பாடசாலைகளில், கொழும்பு 4 – முஸ்லிம் மகளிர் கல்லூரி 187 புள்ளிகள், பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை 174 புள்ளிகளும், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் பாடசாலை 173 புள்ளிகள், கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி 170 புள்ளிகளும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி 170 புள்ளிகளும், மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரிக்கு 169 புள்ளிகளும், ஹட்டன் கெப்ரியல் மகளிர் கல்லூரி 166 புள்ளிகளும், கொழும்பு 4 ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 163 புள்ளிகளும், திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி 160 புள்ளிகள் என்ற அடிப்படையிலும் வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Related posts: