தவறான சாரத்தியம் : 20 பேருக்குத் ஒரு வருடத்தடை!  

Friday, January 5th, 2018

மதுபோதையில் மோட்டார் வாகனங்களைச் செலுத்திய 20 சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரங்களை ஒரு வருடத்துக்குத் தடுத்து வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களை முன்னிட்டு பொலிஸார் சிறப்புச் சுற்றி வளைப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது மதுபோதையில் வாகனம் ஓட்டிய பலர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 20 பேருக்கு எதிராக பொலிஸார் நேற்று முன்தினம் மன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அவர்களில் அரச உத்தியோகத்தர்களான ஐவரை தலர ஆயிரத்து 500 ரூபாவை அரச செலவாக செலுத்துமாறும் அவர்களுடைய சாரதி அனுமதிப்பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடை நிறுத்தி வைக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டது.

பதின்மூன்று பேருக்கு 7 ஆயிரத்து 500 ரூபா  வீதம் தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன் ஐம்பது மணித்தியாலங்கள் கட்டாய சமுதாய சீர்திருத்த சேவையில் ஈடுபடுமாறும் அவர்களுடைய சாரதி அனுமதிப்பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறும் நீதிவான் சின்னத்துரை சதீஸ்வரன் உத்தரவிட்டார்.

இதேவேளை அந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர்களைக் கடுமையாக எச்சரித்த நீதிவான் அவர்கள் மருத்துவர்களாக வரவிருப்பதை கருத்தில் கொண்டு எச்சரிக்கை செய்து விடுவிப்பதாக தெரிவித்தார்.

Related posts: