நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட “A” பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட “B” பட்டியலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணைக்குழு தகவல்!

Thursday, April 11th, 2024

2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட “A” பட்டியலும்  2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட  “B” பட்டியலும் தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பெயர் பட்டியல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 6 ஆம் திகதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்கள் உள்ளூர் அதிகார சபைகள் கிராம உத்தியோகத்தர் ஆகிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்குவது, பெயர்களை புதிதாக சேர்ப்பது அல்லது பெயர்கள் தொடர்பில் வேறு சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வாக்காளரின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள (www.elections.gov.lk) என்றும் இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றுமு் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் ...
வறட்சியான காலநிலை - சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத...
சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிருங்க...