வறட்சியான காலநிலை – சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Tuesday, August 22nd, 2023

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக நீர், இளநீர், தேசிக்காய் சாறு, தோடம்பழம், மாதுளம்பழம், ஜீவனி போன்ற நீராகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்குமாறும் பெற்றோர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து - மின்விநியோகத்தில் தடை ஏற்பதாதெனவும் அறிவிப்பு இலங்கை மின்ச...
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி - தகுதியானோர் பாதிப்பு - துறைசார் மேற்பார்வைக...