நாடளாவிய ரீதியாக வாகன போக்குவரத்து விதிமுறைகள் இறுக்கம்!

Monday, June 19th, 2017

போக்குவரத்து விதிமுறைகளை முன்னெடுத்து செல்வதற்காக விசேட வாகன சோதனை விதிமுறைகள் நாடளாவிய ரீதியாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில், கொழும்பு நகர எல்லைக்குள் பிரதான வீதிகளை அண்மித்த வகையில் வாகனங்களின் முறையற்ற போக்குவரத்து காரணமாகவே வாகன நெரிசல்களுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதனால் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் வீதி ஒழுக்குமுறைகளை கடைபிடிப்பதற்கு போக்குவரத்து சட்டத்திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த பொலிஸ்மா அதிபர் பூஜ்ஜித்த ஜயசுந்தர பணித்துள்ளார். குற்றமிழைக்கும் வாகனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் சுமார் 9130 குற்றச் செயல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.  அவற்றில் அதிகமாக வீதி ஒழுக்கு மீறல்கள் தொடர்பான குற்றச் செயல்களே உள்ளன. அவற்றின் எண்ணிக்கை 7456 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Related posts: