தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்கு பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 28th, 2022

தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எரிசக்தி அமைச்சு 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் இரண்டையும் ஒன்றிணைந்த சரக்குகளாக ஓகஸ்ட் நடுப்பகுதிக்குள் இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (kanchana Wijeskera) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போது 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் விநியோகத்தை எரிசக்தி அமைச்சு நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டிற்கு வந்துள்ள எரிபொருள் சரக்குகளில் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் உள்ளடக்கப்படவில்லை.

கடந்த வாரம் இலங்கைக்கு வந்த ஏற்றுமதியில் 95 ஒக்டேன் பெற்றோல் அல்லது சூப்பர் டீசல் இல்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இலங்கையில் 92 ஒக்டேன் பெற்றோலை விட 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பில் இருந்ததாக தெரிவித்த அமைச்சர், எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகளுக்காக 95 ஒக்டேன் பெற்றோல் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சுகாதாரத் துறைக்காக எரிபொருள் ஒதுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்து எதிர்பார்க்கப்படும் எரிபொருள் ஏற்றுமதியில் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: