யாழ்ப்பாணம் கொட்டடி கழிவு வாய்க்கால் துப்பரவு செய்யும் வேலைத்திட்டம்!

Saturday, February 4th, 2017

யாழ்ப்பாணம்.கொட்டடி பகுதி கழிவு வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டு வெள்ளம் வழிந்தொடுவதற்கான வேலைத்திட்டமொன்று மூன்றரை இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

கொட்டடி மாதர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது இப்பகுதி கிராம அலுவலரால் யாழ்ப்பாணம் பிரததேச செயலகத்தினூடாக 5 இலட்சம் ரூபா கிடைக்கவுள்ளதாகவும் இதில் ஒன்றரை இலட்சம் ரூபாவை வாழ்வாதார உதவிக்கும் மிகுதி மூன்றரை இலட்சம் ரூபாவை பொது வேலைத்திட்டம் என்பவற்றிற்கும் பயன்படுத்தலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாதர் சங்கத்தினர் இந் நிதியைக் கொண்டு பெரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. எனவே மழைக்காலத்தில் பல பகுதிகளிலிருந்தும் வரும் மழை வெள்ளம் வழிந்தோட முடியாமல் இருப்பதாகவும் கிடைக்கின்ற நிதியில் கழிவு வாய்க்காலைத் துப்பரவு செய்து வெள்ளம் வழிந்தொடுவதற்கான வேலைகளை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.

14501868_770125029793248_472455744_n

Related posts: