வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு – அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இந்த பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது.

இதேநேரம் நீதிமன்றின் தீர்ப்புக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எனினும், வடக்கில் மத ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை வளரவிடாமல் தடுக்க விரைந்து தீர்வு காண்போம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது - ஈ.பி.டி.பியின் யாழ...
வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்...
சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் - வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என...