36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Sunday, April 30th, 2017
சூழலை டெங்கு நுளம்பு பரவும் வகையில் வைத்திருந்த 36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
787 பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 39 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது
Related posts:
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி ஆரம்பம்!
ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவை நடத்த அமைச்சரவை அனுமதி!
நீதிபதி சரவணராஜா விவகாரம் - முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2...
|
|
|


