உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவின் கட்டமைப்புக்களை நவீனத்துவம் கொண்டதாக மாற்றியமைக்க உறுதணையாக இருப்போம் – வேலணை பிரதேச தவிசாளர்!

Sunday, June 24th, 2018

தன்னலமற்ற சேவையை செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவர் உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவு சேவை 40 ஆண்டுகளை நிறைவு செய்து தொடர்ந்தும் சேவையற்றி வருகின்றமையானது எமது தீவக பகுதிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்ட வேண்டும் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளரும் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவர் உயிர்பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் 40ஆவது நிறைவு  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்து உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில் –

பிறரது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்ற தம்மை இணைத்து பயணியாற்றும் இந்த உறுப்பினர்கள் அனைவரும் உத்தமர்களாகவே பார்க்கப்ட வேண்டும்.

அவர்களது சேவை மேலும் வலுப்பெறும் வகையில் கட்டமைப்புக்களை நவீனத்துவம் கொண்டதாக மாற்றியமைக்க நாம் எமது பங்களிப்பை முழுமையாக வழங்க காத்திருக்கின்றோம்.

கடந்த காலங்களில் இவ்வாறான மக்கள் நலன் சார் அமைப்புகளை வளர்ப்பதிலும் அவற்றை பாதுகாப்பதிலும் அதிக அக்கறையுடன் செயற்பட்டு அவற்றுக்கு உந்துதல் வழங்கி வந்தவர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். அனாலும் இன்று அத்தகைய அரசியல் நிலைமை காணப்படவில்லை.

அந்தவகையில் நயினாதீவு அன்னையின் சந்நிதானத்தை தரிசிக்க வரும் பலநூறு பக்தர்களின் பாதுகாப்பிற்கென தன்னலம் பாராது தமது உயிரை முதலீடாக வைத்து சேவையாற்றும் இத்த அமைப்பின் தேவைகளை உணர்ந்து அவர்களது படைப்பிரிவை வளர்ப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: