கொரோனா வைரஸ்: பாரிய அழிவுகளை உலகம் சந்திக்கும் – – பிரபல விஞ்ஞானி !

Saturday, March 14th, 2020

சீனாவின வுஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு போன்று உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்த பிரபல சீன விஞ்ஞானி Zhong Nanshan இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தோல்விடையும் நாடுகளின் நிலைமை மிகவும் மோசமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிற்கு வெளியே இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் பரவல், சீனாவின் வுஹான் நகரத்திற்கு சமமான நிலைமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தளவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அது மரணத்தின் வீதம் 3:2 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக மக்கள் அதிகளவில் கரிசனை கொள்ளவில்லை. உலகம் முழுவதும் சுற்றுலா பயணம் மேற்கொண்டு தங்கள் தினசரி வாழ்க்கையை முன்னர் போன்றே மேற்கொள்வதற்கு தடை இல்லை என்றே பலர் நினைக்கின்றார்கள்.

எனினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இது மிகவும் கொடூரமாக தலைதூக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸிற்கு எதிராக எதிர்வரும் சில மாதங்களுக்குள் மருந்துகள் உற்பத்தி செய்துவிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உலகத்தின் அனைத்து அரச தலைவர்களும் சீனாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வது கட்டாயமாகும். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட வேண்டும் என விஞ்ஞானி Zhong Nanshan தெரிவித்துள்ளார்.

Related posts: