தொழிற்சங்கங்களுடன் சுமுக உறவைப் பேணுக அமைச்சர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுரை!

Monday, December 5th, 2016

தொழிற்சங்கங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைப் பேச்சுக்களின் மூலம் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று அமைச்சரவை அமைச்சர்கள் சகலருக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுரை வழங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

தொழிற்சங்கங்களுடன் ஒரு சில அமைச்சரவை அமைச்சர்கள் நடந்தகொள்ளும் முறை பற்றித் தான் பெரிதும் அதிருப்தியடைவதாகவும். அவர்களின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அண்மைக் காலங்களில் அரசுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயாமல் மெத்தனமாக நடந்து கொள்வதால் நிலைமை பாரதுரமாகிறது. அதனால் தானும் பிரதமரும் அந்த விடயங்களில் தலையிட வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படுகின்றது. எனவே. எந்தவொரு தொழிற்சங்கப் பிரச்சினையும் பாரதூரமாவதற்கு முன் அதைச் சுமுகமாகத் தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு நம்பந்தப்பட்ட அமைச்சர்களின் தலையாய பொறுப்பு  – என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ranil-and-maithri-720x480

Related posts: