திருமலை தாங்கிகளை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Friday, April 21st, 2017

திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குகின்றமைக்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கண்டி – கெட்டம்பே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்திற்கே அனைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பங்குப்பற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வேறு கட்சிகளில் மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:


சுகாதார வழிகாட்டல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை...
ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது - இராஜாங...
மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...