2800 குடும்பங்களுக்கு மீள்குடியேற தடை!

Wednesday, May 25th, 2016

நாட்டில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் வசித்த 2800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அவர்களது பழைய இருப்பிடங்களில் வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்களுக்கு அங்கு வசிப்பதற்கான தடையினை தேசிய கட்டிட ஆய்வுநிலையத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் மேலாண்மை பணிப்பாளர்ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

இதில் கேகாலை மாவட்டத்தில் 1762 குடும்பங்களும், கண்டியில் 652, இரத்தினபுரி230, நுவரெலியாவில் 114, மாத்தளையில் 42, குருநாகலில் 31, காலி 15,  கொழும்பு  மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் 15 குடும்பங்களும் இவ்வாறு தமது பழைய வாழ்விடங்களை  இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பதுளை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 661 இடங்களில் மண்சரிவு தொடர்பான ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


யாழ். மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்குப் புதிய நிர்வாகம்!
சுன்னாகத்தில் இடம்பெற்ற சித்திரவதைக் கொலைக் குற்றம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட  பொலிஸார் இடமாற்றம்...
நாட்டில் தேவையான அளவு சீனி கையிரப்பில் - சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாக ஏற்றுமதி இறக்குமதி...