தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
Thursday, December 22nd, 2016
வீட்டுத்தோட்ட தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வளவ பிரதேசத்தில் பத்து இலட்சம் தென்னங் கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை தெங்கு உற்பத்தி சபை முன்னெடுத்துள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு ஐந்து தென்னங்கன்றுகள் வீதம் 20 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கப்படவுள்ளன. உடவளவ, சந்திரிகா குளம், பனாமுரே போன்ற பிரதேசங்களில் வீட்டுத்தோட்ட தெங்கு உற்பத்தி நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெறுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தெங்கு உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இரசாயன பூச்சிக்கொல்லிகள் அல்லது இரசாயன உரத்தை பயன்படுத்தாது சேதன பசளையை மாத்திரம் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts:
தாயும் மகனும் பரிதாப மரணம்!
இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்!
தனியார் கல்விநிலையம் தொடர்பான தீர்மானத்தில் மாற்றம் இல்லை - எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பல...
|
|
|


