நல்லிணக்கத்தை உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020

வளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளின் அடைப்படையில் இருவரும் இணைந்து செயற்படக்கூடிய வழிகள் குறித்து கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுடன் நேற்று கலந்துரையாடியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக டேவிட் மெக்கின்னன் பிரதமருக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கைக்கு ஆதரவளிக்க நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்து எப்போதும் பேசுவது நல்லது என்றும் டேவிட் மெக்கின்னன் அதில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: