பொதுமக்களுக்காகன சேவைகளை தடையின்றி முன்னெடுக்க அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி !

Thursday, July 22nd, 2021

சுகாதார சேவை, துறைமுகம், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், சுங்கம் உட்பட நிறுவனங்கள் மற்றும் 12 துறைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் நீடிக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 இலக்கம் 61 என்ற அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள், அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், கிராம சேவகர் பிரிவு, விவசாய பரிசோதனை உதவி அதிகாரி, இலங்கை மத்திய வங்கி உட்பட சகல அரச வங்கி மற்றும் காப்புறுதி சேவை விவகாரம்,

உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் திண்ம கழிவகற்றல் சேவை, லங்கா சதோச, கூட்டுறவு மொத்த விற்பனை மத்திய நிலையம், உணவு ஆணையாளர் திணைக்களம், மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சகல அரச காரியாலய சேவை, தபால் திணைக்கள சேவை, சுகாதார சேவையுடன் தொடர்புடைய சகல சேவைகளும் இவ் வர்த்தமானி ஊடாக அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது மக்களுக்காகன சேவைகள் தடையின்றிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கிற்காக இத்துறைகள் மற்றும் திணைக்களங்கள் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: