சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக உடலில் ‘சிப்’ பொருத்தி நடமாட்டத்தை கண்காணிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 9th, 2023

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

சில நீதிமன்றங்கள் சிறு குற்றங்களை செய்தவர்களை சிறையில் அடைப்பதோடு, பிணை வழங்குவதில் நீதிமன்றங்கள் தனது விருப்புகளை காட்டி வருகிறது,

இந்த நாட்டின் சட்டப்படி விசாரணைகள் நிறைவடையாதது, சில இளைஞர்கள் சிறையில் இருந்து விடுதலை போன்ற காரணங்களால் பிணை மறுக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பிணை வழங்கும்; சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதாக நம்புவதாக அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: