சீனாவின் போட் சிட்டியில் இந்தியாவும் முதலீடு!

இலங்கையில் சீனாவினால் அமைக்கப்படவுள்ள போட் சிட்டி நிர்மாணத்தில் இந்திய நிறுவனங்களும் முதலீடுகளை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இலங்கை, இந்தியா, சீனா என்ற மூன்று நாடுகளுக்குள் ஏற்பட்ட முக்கிய திருப்பம் என்று இலங்கையில் அரச செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
முன்னதாக போட் சிட்டி திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் போட் சிட்டியின் விற்பனைப் பிரிவு தலைவராக உள்ள லியாங் தௌ கடந்த வாரம், இந்திய முதலீட்டாளர்களுடன் சந்திப்புக்களை நடத்தினார்.
இதன்போது ஐந்து இந்திய நிறுவனங்கள் போட்சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளன.
Related posts:
ஆங்கிலமொழி உயர்தர கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்!
இலங்கையின் பூகோள அமைப்பே பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை - இலங்கை பொருளாத...
|
|