போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கழி அமோக விற்பனை – பனை அபிவிருத்திச் சபை!

Friday, June 22nd, 2018

பனை அபிவிருத்திச் சபையால் கடந்த போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பனம்கழி பாதுகாப்பான முறையில் போத்தலில் அடைக்கப்பட்டு நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று சபையின் உற்பத்திப் பிரிவினர் தெரிவித்தனர்.

கடந்த போகத்தின் போது சபையால் சுமார் 15 ஆயிரம் லீற்றர் வரையிலான பனம்கழி பனம் பழத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தக் கழியைக் கொண்டு சபையால் பல்வேறு வகையிலான பனம் உற்பத்திப் பண்டங்கள் தயாரிக்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் இந்தப் பனம்கழியைப் போத்தலில் பாதுகாப்பான முறையில் அடைத்து கற்பகம் விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டும் வருகின்றன என்று பனை அபிவிருத்திச் சபையின் உற்பத்திப் பிரிவினர் தெரிவித்தனர்.

அதேசமயம் இந்த ஆண்டுப் போகத்தின்போதும் அதிகளவான பனம் பழத்தில் இருந்து பனம் கழியைப் பெறுவதற்கு சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பனம் பழத்தில் இருந்து பனம் கழியை கறப்பது தொடர்பான பயிற்சிகளை சபை உற்பத்தியாளர்களுக்கு வழங்கவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: