குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை ஆரம்பம்!

Friday, December 8th, 2017

யாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கையை விவசாயிகள் ஆரம்பிக்கவுள்ளனர். அனேகமான இடங்களில் விவசாயிகள் இந்தச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஊரெழு, உரும்பிராய், கோப்பாய் போன்ற இடங்களில் செய்கையாளர்கள் கிழங்குகளை நடுகை செய்து வருகின்றனர். தற்போது காலநிலை சீரடைந்ததை அடுத்து நடுகை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதே சமயம் மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் விதை கிழங்குகளைத் தருவித்துள்ளது. ஏற்கனவே 3 ஆயிரம் அந்தர் வரையிலான விதை உருளைக்கிழங்குகள் எடுத்து வரப்பட்டுள்ளன.

மொத்தமாக 5 ஆயிரம் அந்தர் வரையிலான கிழங்குகள் எடுத்து வரப்படும் என்று சமாசத் தலைவர் இ.தெய்வேந்திரன்  தெரிவித்தார். இந்த விதைக்கிழங்குகள் ஐம்பது வீத மானிய விலையில் செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விதை கிழங்குகளுக்கு விண்ணப்பித்த செய்கையாளர்கள் சமாசத்துடன் தொடர்புகொண்டு பெறுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Related posts:

விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் - மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி !
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டார் - வன்முறைகளுக்கு அடக்கு முறை தா...
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது - இந்த...