பொம்மை வெளியில் ஆழ்துளைக்கிணறு – யாழ் மாநகர சபை ஆணையாளர்!

Saturday, December 30th, 2017

பொம்மை வெளிப்பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் ஆழ்துளைக்கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்கிணறு அமைக்கப்பட்டால் பொம்மை  வெளியில் உள்ள மக்களின் குடிதண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என யாழ்ப்பாண மா நகர சபைஆணையாளர் ரி. ஜெயசீலன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் உள்ள மக்களின் குடிதண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என யாழ் மாநகர சபை ஆணையாளர் ரி. ஜெயசீலன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அந்தப்பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் அமைக்கப்பட்ட நீர்க்குளாயிலிருந்துவரும் தண்ணீரையே தமது தேவைகளுக்குப்பயன்படுத்தி வந்துள்ளனர் எனத்தெரிவித்தார்

இது தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை மேலும் ஆணையாளர் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதி மக்களுக்கான குழாய் மூலமான குடிநீர் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதற்குக்காரணம் நாம் அவர்களுக்கு வழங்கப்பயன்படுத்திய குழாய்க்கிணறு தற்போது பாவனைக்கு உகந்ததாக இல்லை என்றார்

இது குறித்து அவர் தொடர்ந்நது தெரிவித்ததாவது: தற்போது குடிதண்ணீர்ப்பவுசர் ஊடாக வழங்கிவருகின்றோம். அவர்களுக்கு தடையின்றிக்குடிதண்ணீரை வழங்குவதற்காக பதிதாக ஆள்துளைக்கிணறு ஒன்றை அமைக்கத்திட்டமிட்டுள்ளோம். கிணறு அமைக்கத்தெவையான நடவெடிக்கையை எடுத்துள்ளோம். முதற்கட்டமாக கிணறு அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் நடவெடிக்கை இடம்பெறவுள்ளது.- என்றார்

Related posts: