கால்நடைகளைக் கட்டி நெற்செய்கைக்கு உதவுக! விவசாயிகள் தரப்பில் கோரிக்கை!

Tuesday, November 15th, 2016

அரியாலை, செம்மணி, நெடுங்குளம் பகுதிகளில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுப் பயிர் வளர்ந்து வரும் நிலையில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்காக வெளியில் விடாது கட்டி வளர்க்குமாறு நல்லூர் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் அரியாலை விவசாயிகள் சம்மேளனம் என்பன வேண்டுகோள் விடுத்துள்ளன.

மழை பெய்ததன் காரணமாக பல சிரமங்களின் மத்தியில் விவசாயிகள் விதைப்பை மேற்கொண்டு பயிர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தாத வகையில் கால்நடைகள் வளர்ப்போர் தமது கால்நடைகளைக்; கட்டுப்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை மீறி வயல்களுக்குள் பிரவேசிக்கும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு விவசாயிகள் சம்மேளனத்தில் ஒப்படைக்கப்படும். கால்நடை உரிமையாளர்கள் தண்டப் பணம் செலுத்தியே அவற்றை மீட்டுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கபட்டது.

123

Related posts: