உள்ளூராட்சி சபை கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் மும்முரம்!

Saturday, February 24th, 2018

உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர்களின் பதவியேற்புக்கு முன்னர் சபைகளின் கட்டடங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

தவிசாளரின் அலுவலக அறை, ஓய்வு அறை, உறுப்பினர்களின் ஓய்வு அறை மற்றும் கூட்ட மண்டபம் போன்றவை தனித்தனியான வர்ணங்கள் பூசப்பட்டு புதிய வர்ணத்தில் காட்சியளிக்கின்றன. கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் கட்டடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டன எனவும் அதன் பின்னர் தேர்தல் முடிவடைந்து சபை அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணம் தீட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சபை அங்கத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவர்கள் கூட்ட வேளையில் அமரக்கூடிய வகையில் மேசைகள் நாற்காலிகள் புதிதாகக் கொள்வனவு செய்வதிலும் சபைகளின் செயலாளர்கள் ஆர்வம் காட்டி வருவதைக் காணமுடிகிறது. முன்னைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட தற்போது உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவர்களுக்கென புதிதாக தளபாடங்கள் கொள்வனவு செய்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: