இந்தியா செல்லும் யாத்திரிகர்களுக்கு இலவச விசா!
Monday, August 22nd, 2016
இந்தியாவிற்கு புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரையாளர்களுக்கு விசாவை இலவசமாக வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ஆர்.கே. சிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரதி இந்தியத்தூதுவர் ஆரிநாதம் பாக்சீ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் ஈசா ஸ்ரீவாத்வச ஆகியோரின்ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே உயர்ஸ்தானிகர் ஆர்.கே.சிங்கா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா மீதான நல்லெண்ணத்தை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவின் சுற்றுலா கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும்இந்திய அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வற் வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணனாது!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை!
யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு - கடந்த 3 வாரங்களில் 21 பேர் பாதிப்பு - வைத்தியர் யமுனானந்தா எச...
|
|
|


