இலங்கையில் இணையயுத்தம் வருமா?

Friday, August 26th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது நேற்று மாலை ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடரடபாக வெளியாகியுள்ள செய்தியில் – ஸ்ரீலங்கன் யூத் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது  அத்துடன் குறித்த ஸ்ரீலங்கன் யூத் குழுவினால் இணையத்தளத்தில் சிங்களத்தில் கோரிக்கைகளையும் முன்வைக்கப்பட்டிருந்தன.

சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாக இந்தக்குழு தெரிவித்திருந்ததுஇலங்கையின் இணையத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள இந்தக்குழு, இல்லையேல் இலங்கையில் இணையயுத்தம் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தது.உங்களுக்கு இவற்றை செய்யமுடியாது போனால் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்தக்குழு கோரியிருந்தது.பிரதமரின் பொறுப்பற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த இணையத்தில் ஸ்ரீலங்கன் யூத் குழுவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் சில மணித்தியாங்களின் பின்னர் குறித்த இணையத்தளம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: