மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் 21 பேர் விடுவிப்பு!
Wednesday, March 6th, 2019
கடந்த வெள்ளிக்கிழமை மாலைதீவில் கைதான 25 இலங்கை மீனவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் குறித்த 21 பேரும் விடுவிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும், விசாரணைகள் நிறைவடையும் வரை கைது செய்யப்பட்ட 4 படகோட்டிகளையும் மாலைதீவு அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நான்கு பேரையும் விடுவிப்பதற்கான கலந்துரையாடல்களை மாலைதீவு தூதுவராலயம் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட 21 பேரிடமும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் விரைவில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்று கொடுத்து வானுர்தி மூலம் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இத்தாலி கடலில் அகதிகள் சென்ற படகில் 23 பேர் சடலமாக மீட்பு!
ஒரு மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் - இலங்கை மருத்துவர் சங்கம்...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும்!
|
|
|
வைத்திய அலுவலகங்களில் வாகனமின்மையே சேவையின் சிக்கலுக்கு காரணம் -வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் ச...
மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டுக்கு ஓரிரு தினங்களுக்குள் தீர்வு - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அதிகூடிய வெப்பநிலை - எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென ...


