வைத்திய அலுவலகங்களில் வாகனமின்மையே சேவையின் சிக்கலுக்கு காரணம் -வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, May 30th, 2018

வடமாகாணத்தின் கால்நடை வைத்திய அலுவலக பிரிவுகளில் உத்தியோகபூர்வ வாகனம் இல்லாத காரணத்தால் கால்நடை வைத்தியர்களால் பொது மக்களுக்கு பூரணமான சேவையை வழங்க முடியாமல் உள்ளது என வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளவை வருமாறு:

ஒரு சில திணைக்களங்களில் உள்ள வாகனங்கள் இருபது வருடங்களுக்கும் அதிகமான பழைய வாகனங்களாதலால் அவை திடீர், திடீரென பழுதுபடுகின்றன.

இதனால் கால்நடை வைத்தியர்கள் களப் பணிகளின் போது பண்ணையாளர்களின் முச்சக்கரவண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் செல்ல வேண்டி ஏற்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் அரைவாசிக்கும் அதிகமாக கடமை புரியும் பெண் வைத்தியர்களுக்கு இவ்வாறான பிற வாகனங்களில் செல்வதனால் அசௌகரியமான நிலைமை காணப்படுகின்றது.

மேலும் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் திணைக்களத்தின் தரம் 1 இற்குரிய சிரேஷ்ட கால்நடை வைத்தியர்களின் வேதன படியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மிகக் குறைந்த கொடுப்பனவுகளே வழங்கப்பட்டும் வருகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts:

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை பிரிவுகள் தயார் - தொற்று நோய் தடுப்பு பிரிவின...
காலநிலை மாற்றம் - ஈடுகொடுக்கும் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு - செயற்பாடுகளின் முன்னே...
இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் - கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீ...