நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை பிரிவுகள் தயார் – தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021

கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் சில விடுதிகளை கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மைக்காலமாக நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகிரித்துள்ளது. குறிப்பாக தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

தற்போதைய சூழலில் எமது மொத்த வைத்தியசாலை கட்டமைப்பில் 18 ஆயிரம் பேர் கொவிட் தொற்றாளர்களாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எதிர்காலத்தில் பல வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சையளிக்க எதிர்பார்ப்பதுடன், நாட்டில் உள்ள அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு சிகிச்சையளிக்க பல விடுதிகளையும் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தனிமைப்படுத்தல் நிலையங்களை வைத்தியசாலை கட்டமைப்பை போன்று இடைநிலை சிகிச்சை நிலையங்களாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் முழுமையான கண்காணிப்பின் கீழ் கொவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: