மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனம்!
Tuesday, September 20th, 2016
இலங்கை அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனமொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் பற்றி விசாரணை செய்ய விசேட நிறுவனமொன்றை உருவாக்கும் யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த யோசனை ஏற்கனவே நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அநீதிகள், அசௌகரியங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தின் ஊடாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மோசடிகளை கட்டப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts:
இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தும் - சுற்றுச்சூழ...
மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் - சுகாதார அமைச்சு வேண்டுகோள்!
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு உள...
|
|
|
கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை - வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமை...
கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு - வைப்பி...
தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு - யாழ் மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிப்ப...


