தொடரும் சீரற்ற காலநிலை – டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிப்பு என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
Tuesday, January 23rd, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் இந்த வருடத்தின் கடந்த 20 நாட்களில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 7,507 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 1,602 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 1,536 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 637 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
000
Related posts:
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் தாமதம் – 4 ஆம் திகதி அறிவிப்பு வெளிவரும் என கல்வி அமைச...
பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை தீவிர நகர்வு - புடினுக்கு எழுத்துமூல கடிதமும் கையளிப்பு!
இலஞ்சம் மற்றும் மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - ஆணையாள...
|
|
|


