வீழ்ச்சியடைந்துள்ள கல்வியை கட்டியெழுப்ப புதிய திட்டம் – பிரதமர்!

Friday, March 30th, 2018

வடமாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பத்து ஆண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் தொண்டராசிரியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஒரு தொகுதி ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் யுத்தத்திற்கு முன்னர் கல்வியில் சிறந்த மாவட்டங்களாக கருதப்பட்டன. இவற்றுக்கு அடுத்தபடியாக கண்டி, காலி, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் காணப்பட்டன.

இந்நிலையில், 30 வருட கால யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி முழுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிரியர்கள் குறித்த பகுதிகளை கைவிட்டுச் சென்றனர். அதன் இழப்பு நாட்டுக்கு உள்ளது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கல்வி முறைமையை முழுமையாக மாற்றம் செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையை பத்து ஆண்டுகளுக்குள் ஆரம்பித்தால் யாழ்ப்பாணத்தின் கல்வி நிலைமையை மீளவும் முன்னேற்ற முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts:

அமைச்சர் விஜயகலா, சுவிஸ்குமாரை மக்களிடமிருந்து காப்பாற்றுவதாக வெளியான வீடியோ குறித்து ஆராயுமாறு நீதி...
பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து பகிடிவதையை இல்லாதொழிப்பேன் - கல்வி அமைச்சர் நம்பிக்கை!
அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!