கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீட்டுக்கும் இடமில்லை – அரசாங்கம் உறுதி!

Wednesday, May 5th, 2021

கொவிட் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல குறித்த தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எந்தவித அரசியல் தலையீட்டுக்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்த போதே இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில் – ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையும், ஜனாதிபதி செயலணியும் மிகவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

வைத்தியசாலைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை 4,000 -, 5,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பதிரன தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே தடுப்பூசிகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் பதிரன இரண்டாவது தடுப்பூசிகளை நம் நாட்டிற்கு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர். தற்போது நாட்டில் 3 இலட்சத்த 45,ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கிய சில நாடுகளில் அவை மேலதிகமாக உண்டு. இந்த நாடுகளில் இருந்து அவற்றை பெற்றுக்கொள்வதற்காக தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: