சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை!

Wednesday, May 16th, 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை வியாழக்கிழமை கூடவுள்ளதுடன் இதன்போது அரசாங்கத்தில் தொடர்வதா? இல்லையேல் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக என்பது தொடர்பாக கட்சியினரால் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் சுதந்திரக் கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தும் யோசனையை முன்வைப்பதற்கு அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் அணி திட்டமிட்டுள்ளதால் இந்தக் கூட்டம் தீர்மானம் மிக்கதாக அமையுமெனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு முன்வைக்கப்படும் யோசனை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படுமாயிருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகும் நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த 24ஆம் திகதி கூடியபோது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்படி எதிர்வரும் 8 ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்nருந்தமையினால் நாளைய தினமே கட்சியின் மத்திய செயற்குழவை கூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மாத்திரமின்றி அரசாங்கத்தில் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கடந்த 1ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெற்ற போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களின் அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்படி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதத்திரக்கட்சி தொடர்வது உறுதிப்படுத்தபக்பட்டுள்ள போதும் எதிர்க்கட்சியில் அமர்ந்த 16 பேர் அணியினர் சிறிலங்க சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிந்து விலக வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

அத்துடன் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் பதவி நிலைகளில் இருப்பவர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இருப்பதனால் மத்திய செயற்குழுவில் இது தொடர்பான யோசனையை முன்வைக்கும் போதும் கடும் நெருக்கடி நிலைமைக்கு கட்சி தள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவர்களின் நிலைப்பாட்டுக்கு அதரவாக தற்போது அரசாங்கத்திலுள்ள சிலரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டம் தீர்மானம் மிக்க கூட்டமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறிலங்கா சுதத்திரக் கட்சியின் தற்பேதாதைய செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் தொடரும் என கருத்துக்களை வெளியிட்டு வருவததும் குறிப்பிடத்தக்கது.

Related posts: