யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு – கடந்த 3 வாரங்களில் 21 பேர் பாதிப்பு – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!

Thursday, November 25th, 2021

யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட சுகாதார நிலமை தொடர்பாக நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம், நல்லுார், கோப்பாய், சண்டிலிப்பாய், வேலணை, தெல்லிப்பழை, பளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே தற்போதுள்ள மழையுடனான காலநிலையில் டெங்கு தொற்ற பரவாமல் இருப்பதற்கு சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதாலும், வீதிகளில் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் வீசாதிருப்பதாலும் டெங்கு தொற்றிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாக்கலாம் என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்தது ம...
புதிய பேருந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என ஆராய விசேட வேலைத்திட்டம் - தே...
வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!