அத்துமீறி சுகாதார அமைச்சில் நுழைந்த மேலும் இரு மாணவர்கள் கைது!

பல்கலை மாணவர்கள் சுகாதார அமைச்சில் அத்துமீறி சொத்துக்களுக்கு சேதம் விலைவித்த சம்பவம் தொடர்பில் கலைப்பீட மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியம்பலாண்டுவ – கொட்டியாகல பிரதேசத்தில் தனது வீட்டில் மறைந்திருந்த போது காவற்துறையால் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனுடன் இந்த சம்பவம் குறித்து கட்டான பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தம் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கையை நிராகரித்தார் அமைச்சர் பைஸர் முஸ்தபா?
அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல நடவடிக்கை - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜப...
திங்கள்முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!
|
|