தூசு தட்டப்படும் அலுவலகம் – மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் கட்சி அலுவலகம் அல்ல – நீல நிறம் அகற்றப்படும் என யாழ் அரச அதிபர் தெரிவிப்பு!

Friday, February 24th, 2023

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியின் நிறத்தில் வர்ணம் பூசி பேணி வந்த அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்ட பின்னர் அலுவலகம் செயலிழந்து காணப்பட்டது

இந்நிலையில் நேற்று கடற்தொழில் அமைச்சர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தூசு தட்டி தூய்மையாக்கப்படுள்ளது

இதேவேளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒரு கட்சிக்கான அலுவலகம் அல்ல என அரச அதிபர்அ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்

யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு நீல நிற வர்ணம் பூசப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஊடகவியலாளர்கள்’ வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு அலுவலமே தவிர அது கட்சி அலுவலகம் அல்ல. ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் ஏதாவது கட்சி சார்பான வர்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


யாழ். புத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் ஐந்து  நாட்களி...
அமெரிக்க உதவி திட்ட உடன்படிக்கை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு ஐம்பது கிலோகிராம் யூரியா, உரம் ...