ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு ஐம்பது கிலோகிராம் யூரியா, உரம் இலவசம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, September 16th, 2022

ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோகிராம் யூரியா, உர மூட்டை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உரத்தின் அளவை இலவசமாக வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவச யூரியா உரம் மற்றும் மும்மடங்கு சூப்பர் உரம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு நேற்று விவசாய அமைச்சில் கைச்சாத்திட்டுள்ளது.

அந்த ஒப்பந்தங்களின்படி இந்த பருவத்திற்கு தேவையான யூரியா, உரம் மற்றும் மும்மடங்கு சூப்பர் உரம் வழங்குவதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை

இலங்கையில் நெல் விவசாயத்திற்கான பயனாளிகள் தெரிவு மற்றும் உர விநியோகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தமானது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விமலேந்திர ஷரன் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார ஆகியோருக்கு இடையே நேற்று கைச்சாத்திடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பான FAO, அதன் பங்காளிகளின் ஆதரவின் மூலம், இலங்கையில் எதிர்வரும் பயிர்ச்செய்கை பருவங்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் யூரியா மற்றும் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் (TSP) உரங்களை கொள்வனவு செய்ய உதவவுள்ளது.

கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கும், விவசாய அமைச்சின் ஊடாக நாட்டிலுள்ள நெல் விவசாயிகளுக்கான அத்தியாவசிய விவசாய உள்ளீடுகளை விநியோகிப்பதற்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மனித உடலுக்கு உகந்தது அல்லவென்றும் அதனை விலங்கு தீவனத்திற்காக மாத்திரம் பயன்படுத்துமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர வெளியிட்ட கருத்து மூலம் இராஜதந்திர ரீதியான பிரச்சினை ஏற்படக் கூடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்துக்கு அமைச்சர் அமரவீர பதில் வழங்கியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்ள வேண்டாம் என்ற எந்தவித அறிவிப்பையும் தாம் வெளியிடவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தரமான அரிசி உற்பத்தி இடம்பெற்றுள்ளதன் காரணமாக வெளிநாட்டு அரிசியை உட்கொள்வதை தவிர்த்து உள்ளூர் அரிசியை பயன்படுத்துமாறு கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் தரமான அரிசி, மிளகாய், மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கும் மதுவரி...
பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்க...
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 84 ஆயிரம் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ...