எல்லை நிர்ணய அறிக்கையை நிராகரித்தார் அமைச்சர் பைஸர் முஸ்தபா?

Tuesday, January 3rd, 2017

இறுதி அறிக்கையில் உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திடாமையால் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நிராகரித்துள்ளார்.

குறித்த குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்ட, முன்னாள் ஆளுனர் சாலிய மெதிவ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.மிஸ்பா ஆகிய உறுப்பினர்கள் இறுதி அறிக்கையில் கையெழுத்திடாமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை அறிக்கை தமக்கு கிடைக்கப் பெறாமையே கையெழுத்திடாமைக்குக் காரணம் என சம்பந்தப்பட்ட இருவரும் குறிப்பிட்டுள்ளனர். அறிக்கையை வாசித்து பார்க்காது கையெழுத்திட முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், குறித்த குழுவில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் நியமிக்கப்பட்ட, சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை ஆகிய உறுப்பினர்கள் இறுதி அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். இதற்கமைய தான் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக அக் குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அந்த அறிக்கையின் தரம் குறித்து பிரச்சினை தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

fizar

Related posts: