பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தீர்வு கிட்டும் – பல்கலைக்கழக நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத உழியர்களிடம் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, September 23rd, 2019

தொழிற்சங்கங்களின் உறுதிமிக்க போராட்டங்களூடாகவே ஒவ்வொரு ஊழியரும் தத்தமது தொழில்துறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள  முடியும் அந்தவகையில் பொதுச் சேவைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில் ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுப்பது ஒவ்வொரு தொழிலாளர்களதும் ஜனநாயக உரிமையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத பல்கலைக்கழக உழியர்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நியமனம் வழங்கலில் உள்ளீர்பதற்கான பட்டியல் வெளியாகியிருந்தது. இதில் கோரப்பட்ட பதவிகளுக்காக விண்ணப்பித்திருந்த பலரது பெயர்கள் இணைக்கப்படாதுள்ளதாக பலதரப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் எந்தவொரு ஊழியரும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

கடந்தகாலங்களில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் எந்தவொரு இளைஞர் யுவதியும் பாதிக்கப்படாத வகையில் பாரபட்சமற்ற வகையில் பதவிநிலைகளை பெற்றுக்கொடுத்திருந்துள்ளோம். அதுமட்டுமல்லாது எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கே அரச பணிகளில் முன்னுரிமையும் வழங்கியிருந்தோம்.

ஆனால் ஆரரசுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் தேசிய கூடட்டமைப்பினரின் ஆளுமையற்றதும் சுயநல போக்கின் காரணமாக இன்று நிலைமைகள் முற்றாக மாறிவிட்டதுடன் பதவி நிலைகளுக்கு எமது பிரதேசங்களின் இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு வேற்று மாவட்டங்களிலிருந்து  எமது   பகுதிக்கான பதவி நிலைகளின் ஆளணிகள் நிரப்பப்படும் பரிதாபமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இன்று எமது மக்கள் எதற்கெடுத்தாலும் வீதிக்கிறங்கி போராடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனாலும் தற்போது பல்கலைக்கழகத்தில் உள்ளீர்க்கப்படாது பறக்கணிக்கப்பட்ட ஊழியர்கள் தொடர்பில் நான் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்ததுடன் அதற்கான தீர்வு வேண்டும் என்றும் கோரியிருக்கின்றேன்.

இதற்கான தீர்வுகளை பெற்ஞறுக்கொள்வதற்காக துறைசார் தரப்பினருடனும் பேச்சுக்களை மேற்கொண்டள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழில்வாய்ப்புக்கள் பறிபோகுமானால் தமது எதிர்காலம் மட்டுமல்லாது தம்மை நம்பி இருக்கும் குடும்பங்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன் அதிலிருந்து தம்மை பாதுக்காத்துக்கொள்ள நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: