கடற்றொழில் சார் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022

காலி மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள ஜஸ் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் காலி மீன் பிடித் துறை முகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது

குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழில் சார் மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதும்  தற்போதைய அரசாங்கத்தின் நோக்குகளில் ஒன்றாக இருப்பதாக, காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

இதேநேரம் தென்னிலங்கையில் அமைந்துள்ள மீன் சந்தைகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலுணவுகள் அனைத்தும நியாயமான விலையிலும் சுகாதார முறையிலும் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தினை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியதுடன், சந்தை வியாபாரிகளுடனும் கலந்துரையாடினார்

இதேநேரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக, இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் தென்னிலங்கையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்களின்  புனரமைப்பு பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

பேருவளை, மருதானை மீன்பிடி இறங்குதுறையின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல்  தூர்வாருதல் செயற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கடற்றொழில் சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியிரந்தமை குறிப்பிடத்தக்டகது.

Related posts:

புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...
சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வ...