சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, April 16th, 2023

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

பண்ணை பகுதியில் சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவிற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் குறித்த சிலையை பார்வையிட்டார்.

நாகபூசணி அம்மனின் சிலை வியாழக்கிழமை இரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

இந்த நாட்டில் அனைத்து தரப்பும் சுதந்திரமாக வழிபடுவதற்கான நிலைமை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏனைய மதங்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்..

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தீடீர் தீடிரென சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது அதிகரித்து வருகின்ற நிலையில் அமைச்சர் குறித்த சிலையை பார்வையிட்டது பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்குதுரித தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக...
வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது - கிடைக்கும் சூழலை எமக்கானதாக பயன்படுத்திகொள...